பிரதிப் பிரதான செயலாளர் (திட்டமிடல்) அலுவலகம்


சபரகமுவ மாகாண சபையில் உப தேசிய மட்டத்திலான முழு திட்டமிடலின் மிக முக்கிய பொறுப்பை வகிக்கும் நிறுவனமாக விளங்குவது பிரதிப் பிரதான செயலாளர் (திட்டமிடல்) அலுவலகமாகும். தனி நபர்கள் , சமூகக் குழுக்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு , மாவட்ட அல்லது மாகாண ரீதியாக விளங்கும் புவியியல் நிலைமைகளில் காணப்படும் சமமின்மைகள், வேற்றுமைகளைக் குறைப்பதற்கான முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
எமது நோக்கம்....
மாகாணத் திட்டமிடலின் மிகச் சிறந்த நடத்துனர்
எமது பணி.....
சபரகமுவ மாகாணத்தின் நிலையான அபிவிருத்தியையும், மக்களின் உயர் வாழ்க்கை மட்டத்தையும் ஏற்படுத்தும் நோக்கை முதன்மையாகக் கொண்டு காணப்படுகின்ற வளங்களை செயற்றிறன் மிக்கதாகவும் , பயன்தரக்கூடிய விதத்திலும் உபயோகிப்பதற்காக முறையான திட்டமிடல் நடவடிக்கை ஒன்றின் மூலம் கொள்கைத் தீர்மானிப்போருக்கும் மற்றும் சகல நிறுவனங்களுக்கும் அவசியமான வழிகாட்டுதலையும் , பிற்புலத்தையும் வழங்குதல்.
எங்கள் மதிப்புகள்....
- பொறுப்புக்கூறல்
- நேர்மை
- புதுமை
- நிலைத்தன்மை
எங்கள் இலக்கு.....
திறமையான மற்றும் பயனுள்ள திட்டமிடல் செயல்முறை மூலம் சபரகமுவ மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
எங்கள் குறிக்கோள்கள்....
- அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நிறுவனத்தின் அனைத்து துறைகளும் முழு வடிவமைப்பு திறன் கொண்ட செயல்படுத்தல்.
- அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தொடர்ச்சியான செலவுகளில் 15% குறைப்பு.
- அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வெளி நிதி மூலங்களிலிருந்து திரட்டப்பட்ட மூலதன முதலீட்டின் விகிதத்தை 5% அதிகரிப்பு.
- ஓரங்கட்டப்பட்ட நபர்கள், சமூக குழுக்கள் மற்றும் புவியியல் பிரிவுகளின் தேவைகளுடன் சிறப்பு திட்டங்கள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைக்க வடிவமைப்பு திறனை அதிகரிக்கும்.
செயற்பாட்டுத் திணைக்களங்கள்
- தகவல் , பகுப்பாய்வு மற்றும் விசேட கருத்திட்டத் திணைக்களம் See More...
- மாகாணத் தரவுப் பகுதியை நடத்திச் செல்லுதல்.
- தகவல் பிரிவை செயற்படுத்தல்.
- வேலையற்ற பட்டதாரிகள் முன்மொழிவுத் திட்டத்தை இணைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
- மாகாண தொழிற் பயிற்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
- திறன்கள் அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
- சபரகமுவ மாகாணத் காரிய சாதன அறிக்கையைத் தயாரித்தல்.
- பகுப்பாய்வு அலகை செயற்படுத்தல்.
- ஈ - தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தல்.
- தரவு மற்றும் தகவல்களை வழங்குவதற்காக மாகாண இணையத் தளமொன்றை நிர்மாணித்துக் கொண்டு நடத்தல்.
- தரவு, தகவல் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் வெளியிடுதல் தொடர்பான கருத்திட்ட அறிக்கைகள் மற்றும் கொள்கை விளக்கப் பத்திரங்களைத் தயாரித்தல்.
- விசேட கருத்திட்டங்களை தொடர்புபடுத்தல் , நடைமுறைப்படுத்தல். (உ+ம் .புறநெகும, கருப்பொருள் கிராமங்கள்)
- பூகோள ரீதியான தகவல் பிரிவொன்றைச் செயற்படுத்தல்.
- சபரகமுவ மாகண தகவல் மையத்தை (உதவிக் கவுன்டர் - Help Desk ) இணையத் தளச் சேவையொன்றாக செயற்படுத்தல்.
- பிரதேச அபிவிருத்தி மற்றும் நிறுவனத் திணைக்களம் See More...
- பிரதேச அபிவிருத்தித் திட்டத்தைச் செயற்படுத்தல். ( மாகாண பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு).
- அலுவலக நிறுவனங்கள், நிர்வாகம், நிதி மற்றும் கணக்கு நடவடிக்கைகள்.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகள்.
- மீண்டுவரும் மதிப்பீடுகள் , ஒதுக்கீட்டுக் கணக்குகளைத் தயாரித்தல்.
- அலுவலக நூலகத்தை மற்றும் ஆவண சுவடிக் கூடங்களை செயற்படுத்துதல்.
- தேசிய கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களுடன் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைத்தல் நடவடிக்கைகள்
- உற்பத்தித் திறன் நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு.
- பிரதேச ரீதியான வேறுபாடுகள் மற்றும் சமமின்மையைக் குறைப்பதற்கான கருத்திட்ட யோசனைகளை மற்றும் கொள்கைப் பத்திரங்களைத் தயாரித்தல்.
- திட்டமிடல் மற்றும் செயற்படுத்தல் திணைக்களம் See More...
- செயற்படுத்தல் மற்றும் பின்னாய்வு செய்யும் திட்டத்துடன் இடைக் கால மாகாண அபிவிருத்தித் திட்டமொன்றைத் தயாரித்தல்.
- மூலதன மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
- வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல். / பெறுபேற்றினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனச் சட்டகம்.
- மாகாண சபையின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்தல்.
- மாகாண அமைச்சுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை அவதானித்தல்./ செயற்படுத்தல் மற்றும் மதிப்பிடல்.
- மாகாண சபையுடன் தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் முன்னேற்றத்தை செயற்படுத்தல் மற்றும் மதிப்பிடல்.
- வருடாந்த ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இணையத் தள செயற்பாட்டுத் தொகுதியை ஸ்தாபித்தல்.
- விசேட கருத்திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல். ( UNDB நிகழ்ச்சித்திட்டம்).
- மாகாண சபைக் கொள்கைத் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் வரவு செலவுத்திட்ட உரையை தயாரிப்பதுடன் தொடர்பான தகவல்களை வழங்குதல்.
- மாகாண சபையின் கருத்திட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்களுக்கிடையில் நிதியை மாற்றீடு செய்தல்.
- மாகாணத்தின் பிரிவுகளுக்கிடையிலான திட்டங்களைத் தயாரித்தல்.
- மாகாண பெளதீகத் திட்டம் / உபாய வழித் திட்டம் / ஒருங்கிணைந்த திட்டத்தை ஒருங்கிணைத்தல்.
- மாகாண பிரிவுகளுக்கிடையிலான அபிவிருத்தி மற்றும் தொடர்புடைய கருத்திட்ட அறிக்கைகள் மற்றும் கொள்கைப் பத்திரங்களைத் தயாரித்தல்.