சபரகமுவ மாகாணத்தின் நிலையான அபிவிருத்தியையும், மக்களின் உயர் வாழ்க்கை மட்டத்தையும் ஏற்படுத்தும் நோக்கை முதன்மையாகக் கொண்டு காணப்படுகின்ற வளங்களை செயற்றிறன் மிக்கதாகவும் , பயன்தரக்கூடிய விதத்திலும் உபயோகிப்பதற்காக முறையான திட்டமிடல் நடவடிக்கை ஒன்றின் மூலம் கொள்கைத் தீர்மானிப்போருக்கும் மற்றும் சகல நிறுவனங்களுக்கும் அவசியமான வழிகாட்டுதலையும் , பிற்புலத்தையும் வழங்குவதனை பணியாகக் கொண்ட சபரகமுவ மாகாண (திட்டமிடல்) அலுவலகத்தினால் நிறைவேற்றப்படும் மிக முக்கிய சேவையாக இச் சேவை விளங்குகின்றது.
சபரகமுவ மாகாணத்திலிருந்து உருவாகும் மனித வளத்தை பயனுள்ளதாக மாகாணத்தின் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துதல் மற்றும் மாகாணத்தில் உருவாகிய தொழில் முயற்சியாளர்களை அறிமுகப்படுத்துதல் மூலம் தொழிற் சந்தையொன்றை நிர்மாணிப்பது இதன் விசேட நோக்கமாகும்..